நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு..!

2 Min Read
நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

ஈரோடு மாவட்டம், அருகே நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு பாஜக நிர்வாகி குஷ்பூ உருவ பொம்மை செருப்பால் அடித்து எரித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என ஆணவ பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து பெண்கள், திமுகவினர் உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து உள்ளன. அப்போது குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.

நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

குஷ்புவின் உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் திமுகவினர், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் பேரூராட்சி தலைவர் மன்ற தலைவருமான மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் நேற்று பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு மகளிர் உரிமை தொகையை பிச்சை என விமர்சித்த குஷ்பு.

நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

அதனை கண்டித்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து குஷ்பு உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து பேருந்து நிலையம் முன்பு குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்தனர்.

குஷ்பு உருவப்படத்தை நேற்று தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக கட்சி நிர்வாகிகள் கீதாமுரளி, அல்லாபிச்சை, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நம்பியூர் ஒன்றிய திமுக சார்பில் பேருந்து நிலையம் முன்பு குஷ்பு உருவ பொம்மை செருப்பால் அடித்து எரிப்பு

நடிகை குஷ்புவை கண்டித்து நேற்று திமுகவினர் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் குஷ்புவை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Share This Article

Leave a Reply