நாய்க் கறி நாகா மக்கள் ஆர்.எஸ் பாரதிக்கு ஆளுனர் எதிர்ப்பு கீழ்ப்பாக்கத்தில் ஆளுநர் இருக்க வேண்டும்-ஈவிகேஎஸ்

3 Min Read
ஆளுநர் ஆர் எஸ் பாரதி

முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான மு. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் ஆர்.எஸ் பாரதி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது தாக்குதல் தொடுத்தார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை அம்பத்துரில் கருணாநிதி நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடந்தது.

திமுக அரசுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் முறுகல் மோதல் மீண்டும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில் திமுகவின் அடுத்தகட்ட தலைவர்கள் பிஜேபி யின கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில் ஆர் எஸ் பாரதியின் பேச்சு மீண்டும் பாஜக தரப்பில் சர்ச்சை பேச்சாக பார்க்கப்படுகிறது.

ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மூத்த தலைவரான ஆர்.எஸ்.பாரதி, 2019 முதல் 2020 வரை ரவி ஆளுநராகப் பணியாற்றிய நாகாலாந்து மக்களைப் பற்றி ஆவேசமாகப் பேசினார்.

ஆர் எஸ் பாரதி ஆளுநர்

நாய் இறைச்சி சாப்பிடும் நாகா மக்கள்;

அப்போது, “நாய் இறைச்சி சாப்பிடும் மக்கள் கூட ஆளுநரை மாநிலத்தை விட்டு விரட்டும் அளவுக்கு சுயமரியாதையுடன் இருந்தனர். உப்பை உண்ணும் தமிழர்களுக்கு எவ்வளவு சுயமரியாதை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றார்.மேலும், ஆர்.எஸ் பாரதி, ஆன்லைன் ரம்மி மற்றும் கேமிங் தளங்களில் பணத்தை இழந்த 50 பேரின் மரணத்திற்கு ஆர்.என்.ரவிதான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இளங்கோவன்

ஈவிகேஎஸ் இளங்கோவன்;

இதனிடையே, கிண்டிக்கு பதிலாக கீழ்ப்பாக்கத்தில் ஆளுநர் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், “அவரை யாராவது (ஆளுநர்) கீழ்ப்பாக்கத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் அல்லது குற்றாலத்தில் சிகிச்சை பெற வைக்க வேண்டும்” என்றார்.

நாகை மக்கள் குறித்த பாரதியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஆளுநர் ரவி, திமுக தலைவருக்கு ஒரு சிறு அறிக்கையில் பதிலடி கொடுத்தார்.அதில், நாகர்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர் திரு ஆர்.எஸ்.பாரதி அவர்களை ‘நாய் தின்பவர்கள்’ என்று பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது,ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் ஒரு சமூகத்தை காயப்படுத்த வேண்டாம் என்று பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ் பாரதி நான் சொன்னதை ஆளுனர் தவறாக புரிந்து கொண்டார் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருப்பதி நாராயணன்

நாராயணன் திருப்பதி;

நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர் எஸ் பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும் ஆர் எஸ் பாரதி. பிரதமரும், எங்களின் தலைவருமான நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவது பண்பாடாகாது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ். பாரதிக்கு எடுத்துரைக்க வேண்டும். ஒரு வினைக்கு எதிர்வினையாற்ற ஒரு நொடி போதாது. ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். இனியும் அநாகரீகமாக எங்கள் தலைவர்கள் குறித்து பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாகரீகமான, பண்பாட்டு அரசியலை பின்பற்றுவது தான் வாக்களித்த மக்களுக்கு நீங்கள் ஆற்றும் கடமை. அதை விடுத்து, மலிவு அரசியலை முன்னெடுத்து, தரக்குறைவான பேச்சுகளை மக்கள் மத்தியில் பேசுவது முறையற்றது என்பது ஆர் எஸ் பாரதி போன்ற மூன்றாம் தர பேச்சாளர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான தமிழக முதலமைச்சர் பொறுப்பில் உள்ள திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு புரியுமா என்பதே புதிர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட முதலமைச்சர் கண்ணியத்தை கடைபிடிக்க தன் கட்சியினருக்கு அறிவுறுத்துவாரா என்று தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜகவின் நாராயணன் திருப்பதி

Share This Article

Leave a Reply