நாகை சௌந்தரராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்

2 Min Read
நாகை சவுந்தரராஜபெருமாள் கோயில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது அந்தவகையில் நாகப்பட்டினத்தில் சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image
நாகை சௌந்தரராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்

நாகர் தலைவன் ஆதிசேஷன் சௌந்தரராஜ பெருமாள் கோயிலான இத்தளத்தில் சார புஷ்கரணி என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவம் இருந்தார் பெருமாளும் ஆதிசேசனின் தவத்தில் மகிழ்ந்து அவரை தனது படுக்கையாக ஏற்றுக் கொள்வதாக அருள் புரிந்தார் அதன் காரணமாகவே இத்தலம் நாகப்பட்டினம் என பெயர் பெற்றது. 108 திவ்ய தேச கோயில்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள் கோவில் 19 ஆவது திவ்ய தேசமாக விளங்குகிறது ஆதிசேசனின் தவத்தால் மனம் உவந்து தனது சயனமாக திருமால் ஏற்றுக் கொள்ள பட்ட தளம் இதன் காரணமாகவே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி பின்னர் நாகப்பட்டினம் என்று மாறியதாக கூறப்படுகிறது. திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் இத்தளத்தில் தவம் புரிந்துள்ளனர். இத்தளத்தில் மூலவர் நீலமேகப் பெருமாள், உற்சவர் சௌந்தரராஜ பெருமாள், தாயார் சௌந்தரவல்லி கஜலட்சுமி, மாமரம் தல விருட்சம் மரம் ஆகவும், சார புஷ்கரணி தீர்த்தமாகவும், சயனத் திருக்கோலம் கொண்ட புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது.

பிரம்மா இத்தளத்தில் வந்து பெருமாளை வழிபட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப் புகழ்பெற்ற
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடபெறும். இதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையில் வெள்ளிப் பல்லக்கில் பெருமாள் புறப்பாடும், மாலையில் கருட வாகனம், யானை வாகனம் குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலாவும்  நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்துபுஷ்கரணி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை  சுற்றியுள்ள 4 வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share This Article

Leave a Reply