கோவை சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில்
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்பட்டதை கண்டித்து , மாலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஹிந்தி மொழியில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியிடப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோஜோன் மாலில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த கட்சியின் மண்டல செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் புரோஜோன் மாலினை முட்டையிட முயன்றனர். ஊர்வலமாக வந்த அவர்களை காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசு இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிட்டால் திரையரங்குக்குள் புகுந்து திரைப்படத்தை வெளியிடாமல் தடை செய்வோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே புரோஜோன் மால் பகுதிக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.