சென்னை அடுத்துள்ள செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தினம் ஒரு காரணம் சொல்லி பணம் கேட்கும் 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் அச்சத்தில் உறைந்திருக்கும் அழிஞ்சிவாக்கம் குடியிருப்புவாசிகள் . சந்தேகத்திற்க்குரிய நபர்களை உடனடியாக விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் . .
உண்மையில் பணத்திற்காக வருகிறார்களா அல்லது நோட்டமிட வருகிறார்கள் என தெரியாமல் கலகத்தில் உள்ளதாக பொதுமக்கள் புகார் .

சென்னை செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் குடியிருப்பு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் , நள்ளிரவுகளில் வீடு வீடாக சென்று தினம் ஒரு காரணம் சொல்லி பணம் கேட்டு வருகின்றனர் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
” நான் அருகே தான் கூலி வேலை செய்து வருகிறேன் , உங்கள் வீட்டிற்கு கூட நான் தான் பெயிண்ட் அடித்தேன் , எனது குழந்தைகளுக்கு அடிபட்டுவிட்டது , எனது தாய் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை , மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தினம் ஒரு காரணம் கூறி , முன்பின் தெரியாத மர்ம நபர்கள் செங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் இதுபோன்று வீடு வீடாக சென்று பணம் கேட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இவர்கள் மது போதைக்கு பணம் திரட்ட வருகிறார்களா அல்லது எந்தஎந்த வீட்டில் யார் யார் உள்ளனர் ? என நோட்டமிட வருகிறார்களா என புரியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இவர்கள் யார் எங்கிருந்து வந்துள்ளார்கள் என செங்குன்றம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் துணையோடு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நடுஇரவுகளில் மற்றும் , அதிகாலை வேளைகளில் மட்டும் இவர்களை காண முடிவாதக்காகவும், மற்ற பகல் நேரங்களில் இவர்கள் எங்க இருக்கிறார்கள் அல்லது இவர்களது இருப்பிடம் எங்குள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர் .
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/attack-on-woman-dsp-gayathri-at-arupukottai-in-ramanathapuram-district-sp-kannan-investigates-in-person/
மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்புவதற்கு அச்சமடைந்து வருகின்றனர் . செங்குன்றம் காவல்துறையினர் இவர்களை உடனடியாக அடையாளம் கண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இதனால் செங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.