ரத்தக்கரையுடன் கோவையில் மர்ம கார் – போலிசார் விசாரணை..!

2 Min Read

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ரத்தக்கரையுடன் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கோவை, உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று நின்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கடை வீதி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரை சோதனையிட்டனர். பின்னர் காரை திறந்து பார்த்த போது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டவல் மற்றும் போர்வை ஆகியவை இருந்ததும், காரில் ரத்தக்கரை இருந்ததையும் கண்ட போலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

போலிசார் விசாரணை

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.‌ மேலும் பாலமுருகனின் மனைவி தீபா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்த சூழலில் கடந்த 17-ந் தேதி அவர் திடீரென காணாமல் போனதும் அதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியரான வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

போலிசார் விசாரணை

மேலும் இருவரும் ஆசிரியர்கள் என்பதால் அவர்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டு அதன் அடிப்படையில் காரில் கோவை வந்தார்களா? அவ்வாறு அவர்கள் காரில் வந்து இருந்தால் காரை உக்கடம் மார்க்கெட் பின்புறம் நிறுத்திவிட்டு எங்கே போனார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேவேளையில் காரில் படிந்துள்ள ரத்தக்கரை என்ன என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பெரம்பலூர் மாவட்ட போலீசாரும் கோவை வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உக்கம் பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரால் இரவு முழுவதும் கோவையில் பெரும் பரபரப்பு நிலவியது.

Share This Article

Leave a Reply