நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்-வின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, சென்னை சிறப்பு நீதிமன்றம், ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872 ஆம் ஆண்டு ‘ தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் ’ என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர்.
அதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு அவர்களது பணம் திரும்ப தராமல் அலைக்கழிக்கப்பட்டது .

இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படியில்
, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
ஜாமீன் கோரி தேவநாதன் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், முதலீட்டாளர்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பி தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும் என தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வைப்பீடுகள் முதிர்வடைந்தும் தங்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை என்றும், இந்த நிதி முறைக்கேடு தொடர்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தனர்.
காவல்துறை தரப்பில் டி.பாபு ஆஜராகி, இந்த வழக்கில் ஒரு நிறுவனம் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது, ஒருவர் தலைமறைவாக உள்ளார், பாதிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்டடோர் புகார் அளித்துள்ளனர், தினமும் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/financial-company-fraud-in-mylapore-complaint-against-bjp-candidate-devanathan-in-election-commission/
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேவநாதன் யாதவ் உள்பட மூன்று பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை , ஆகஸ்ட் 28ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.