தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வரவேண்டும் என்பது எனது விருப்பம்-கார்த்திக் சிதம்பரம்

3 Min Read
கார்த்திக் சிதம்பரம்

நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு  காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து  கொள்ள வருகை தந்த  சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவருக்கு நெல்லை வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் யோபு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

- Advertisement -
Ad imageAd image


அதனைத் தொடர்ந்து
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தை பொறுத்தவரை 2019 தேர்தல் முடிவை விட 24 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பானதாக இருக்கும் 38 பாராளுமன்ற தொகுதிகளில் 2019 ல் வென்றோம் அடுத்து வரும் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை அது நிராகரிக்கப்பட வேண்டிய கட்சி மக்கள் அதனை நிராகரிப்பார்கள்: சீமான் கட்சியில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை ஒரு முறை கட்சியில் சார்பில் போட்டியிடுபவர்கள் கூட அடுத்த முறை கட்சியில் இருப்பதில்லை. அந்த நிலையில் தான் அவருடைய கட்சி இருக்கிறது. சிவகங்கை தொகுதியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றி விடும் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. கனவு காண்பவர்களை எல்லாம் நாங்கள் கைது செய்ய மாட்டோம்.என்றார் மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில் அடுத்து வரும் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்,

கார்த்திக் சிதம்பரம்

தேசிய அளவிலான கூட்டணி தேசிய கட்சியை மையமாக பவித்திரமாக வைத்தே அமைய வேண்டும். அவ்வாறு தான் அமையும். தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தக் கூட்டணி தெளிவாக அமைந்துள்ளது சில மாநிலங்களில் பரந்த மனப்பான்மையுடன் அக்கட்சிகள் நடக்க வேண்டும். எளிதாக நடந்து விடும் என நான் நினைக்கவில்லை. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அனைத்து தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறும். பிஜேபியை எதிர்த்து அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதில் தவறேதும் இல்லை. அது ஜனநாயகத்தின் ஆட்சியாக இருக்கும். நீட் தேர்வு குறித்த கேள்விக்கு மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தேர்வு நடத்துவது அவசியம் இல்லை போட்டி தேர்வு வேண்டாமா இல்லையா என்பது அடுத்த கேள்வி .அந்தத் தேர்வை மத்திய அரசு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

விஜய் எந்த சித்தாந்தத்தில் அரசியலுக்கு வருகிறார் என தெரியவில்லை. வெறுமனே ரசிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு அரசியல் கட்சி நடத்த முடியாது. வாக்குக்கு பணம் கொடுக்கக் கூடாது என அவர் கூறியிருக்கிறார் நான் ஏற்கனவே அதனை தொடர்ந்து கூறி வருகிறேன்.
அமலாக்கத்துறை என்பதே இருக்கக் கூடாதுஅவர்கள் பணப்பரிமாற்றம் குறித்து மட்டுமே விசாரிக்க முடியும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றம் அது குறித்து முடிவு செய்யும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் கொள்ளி வாய் பிசாசாக அடங்காப்பிடாரியாக உள்ளது. நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று.பூரண மதுவிலக்கு அறிவித்துள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் உள்ளது. உலகம் முழுவதுமே பூரண  மதுவிலக்கு சாத்தியமற்றது. மதுவிலக்கு அறிவித்தால் கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கும் என்று தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக வருவதற்கு நான் விரும்புகிறேன் அதற்கான தகுதியும் எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். தேசிய தலைமை அது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply