உலக அளவில் இயல்பான மனிதர்களுக்கு நடப்பது போல விளையாட்டுப் போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கும் நடைபெறும்.அது போன்ற விளையாட்டுப்போட்டிகளில் இந்தியர்கள் பெருமளவு கலந்து கொள்வார்கள்.தற்போது இன்னும் அதிகளவு கலந்து கொள்வதை கான முடிகிறது.குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் பங்கேற்கின்றனர்.பங்கேற்பது மட்டுமில்லாமல் பதக்கங்களையும் வென்று வருகின்றனர்.
தற்போது சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளிக்கு பாரா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பாக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீனாவில் ஆசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா தடகள போட்டியில் 8 வீரர் வீராங்கனைகளும், பாரா இறகு பந்து போட்டியில் 6 வீரர் வீராங்கனைகளும், பாரா வால் வீச்சு போட்டியில் ஒரு வீராங்கனைகளும் பங்கேற்று உள்ளனர்.அதில் கோவையை சேர்ந்த வீல் சேர் பாரா தடகள வீரர் முத்துராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று முதல் முறையாக சாதனையை படைத்துள்ளார்.தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரருக்கு விமான நிலையத்தில் கோவை மாவட்ட பாரா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.உள்ளூர் பிரமுகர்கள்,நண்பர்கள்,உறவினர்கள் என பலறும் கலந்து கொண்டு வீரரை வரவேற்றனர்.இதில் சர்மிளா ராம் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோவை திரும்பிய முத்துராஜிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் இவருக்கு பிரதமர்,தமிழக முதலமைச்சர் அமைச்சர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கோவையை சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு சென்று பதக்கங்களை வென்றுவருவது இந்தியாவிற்க்கே பெருமை சேர்கிற விதம் பாராட்டுக்குறியது.தமிழக அரசும் இது போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது.முத்துராஜ் போன்ற வீரர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும்.தமிழகம் விளையாட்டுத் துறைக்கென தனி அமைச்சரை நியமத்து அதற்கென தனி கவனம் செலுத்திவருவதை எல்லோரும் அறிவார்கள்.
இன்னமும் இது போன்ர வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த விளையாட்டு வீரர்களுக்கு பல பயிற்சிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது விளையாட்டு பயிற்சியாளர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.தமிழக அரசு செய்யும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.