ராமநத்தம் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவில் பூசாரியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், அடுத்த ராமநத்தம் அருகே கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் சடையன். இவரது மனைவி சின்னப் பொண்ணு வயது 70. அப்போது கணவரை இழந்த இவர், கடந்த 11 ஆம் தேதி தி.ஏந்தல் கிராம வயல்வௌியில் உள்ள வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அப்போது உடல் முழுவதும் மிளகாய் பொடி துாவப்பட்டிருந்தது. அப்போது அவர் அணிந்திருந்த செயின், வளையல்கள் உள்ளிட்ட 8 சவரன் நகை திருடு போயிருந்தது. பின்னர் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
அதில், சின்னப் பொண்ணு குடும்பத்தினர் வயலுக்கு அருகில் உள்ள பெரியாண்டவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். மேலும் கோவில் பூசாரி அமிர்தலிங்கம், ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் இருந்த 10 சென்ட் நிலத்தை மீட்டார்.

இதனால், கோவில் பூசாரி அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கும், சின்னப்பொண்ணு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 11 ஆம் தேதி பூசாரி அமிர்தலிங்கத்தின் மனைவி தமிழ்ச்செல்வி, நிலத்தின் வழியே சென்ற போது, சின்னப்பொண்ணு திட்டினார். அதனை தமிழ்ச்செல்வி கண்டிக்கவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வி, சின்னப்பொண்ணு கழுத்தை நெரித்ததில் அவர் இறந்துள்ளார். மோப்பநாய் கண்டுபிடித்து விடாமல் இருக்க சினிமா பாணியில் மிளகாய் பொடியை துாவி விட்டு அங்கிருந்து தமிழ்செல்வி தப்பிச் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார், தமிழ்செல்வியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில், சின்னப்பொண்ணு அணிந்திருந்த நகைகளை தமிழ்ச்செல்வி எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனால், நகைகளை திருடிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.