திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்..!

2 Min Read

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல். சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம். கொலைவெறி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு வலியுறுத்தல்.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கையும், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட பிரஸ் கிளப் வலியுறுத்துகிறது.

நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அர்கே தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு . இவரை இன்று 24-01-2023 புதன்கிழமை இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்த போது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பியுள்ளனர். இவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு வந்துள்ளார்.

இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தன்னை சிலர் நோட்டமிட்டு வருவதாக காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். இருப்பினும் ‘வழக்கம் போல்’ போலீசார் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தனது வீட்டின் அருகில் இருந்த செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே, நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்

உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார். அப்போது செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது.

மேலும் உண்மை செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசும், காவல்துறையும் உறுதி செய்திட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சங்கம் (பிரஸ் கிளப்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்

Share This Article

Leave a Reply