1944 ஆம் அண்டு மும்பையில் உள்ள துறைமுகத்தில் கப்பலில் தீவிபத்து ஏற்ப்பட்டு Ss Fort Stikine என்ற கப்பல் வெடித்து சிதறியது.

அப்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிர்இழந்தனர். மேலும் அங்கிருந்த 1300க்கும் மேற்ப்பட்டோர் உயிர்இழந்தனர். 3ஆயிரத்ற்க்கும் மேற்ப்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து இந்திய அரசு ஏப்பரல் 14ம் தேதியை நீத்தார் நினைவு தினமாக தேசிய அளவில் அனுசரிக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் 14ஆம் தேதி முதல் 20தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம், மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏர்படுத்தும் வகையில் நிகழ்சிகள் நடத்தபட உள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.