அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீது சிலர் சேற்றை வீசினர். இதுகுறித்து பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், தன் மீது தவறாக வழக்கு பதியபட்டுள்ளதாகவும், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க :http://thenewscollect.com/bjp-female-executive-arrested-for-smearing-minister-ponmudi/
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் மலட்டாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடத்தையும் மக்களை பார்க்கச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய 2பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் ராமர் என்கிற ராமகிருஷ்ணன் என்ற ஒருவரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். பின் தற்போது 3மாதங்களுக்கு பிறகு விஜயராணியை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Leave a Reply
You must be logged in to post a comment.