மே 7ஆம் தேதியோடு திமுக அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ய இருக்கிறது. மூன்றாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
என்ன மாற்றம் செய்யலாம்? எல்லா அமைச்சர்களும் ஏதோ ஒரு வகையில் அரசு கட்டளையிடுவதை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்? என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது உண்மைதான்.
எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்திய மசோதா, தற்போது அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கூட இதற்கான சிந்தனையை யார் வழங்கியது முதல்வருக்கு. அந்த அடிப்படையில் பொதுமக்கள் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். அடுத்ததாக திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது பரிமாற்றம் அறிவிப்பு, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாலும் கூட அதற்கு முன்னரே அந்த துறை செயலாளர் அரசு ஆணையை வெளியிட்டுள்ளார். எங்கே பிரச்சனை நடந்தது யார் யாருக்கெல்லாம் துறை ரீதியான தொடர்புகள் இல்லாமல் போனது? என்கிற சந்தேகம் இதனால் ஏற்பட்ட அறிவிப்பு.
அந்த அறிவிப்பை தொடர்ந்து எதிர்க் கட்சிகள், பொதுமக்கள் கொடுத்த பதிலடிகள். ஒருவகையில் இந்த அறிவிப்புகள் திமுக அரசை அவமானப்படுத்தி உள்ளது.

மேலும் தமிழக முதல்வர் தொடர்ந்து மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு கூட்டம் நடத்தும் பொழுது அதிகாரிகள் மீது வந்து குவிந்த புகார்கள். 90% க்கு மேல் அவை உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அடிப்படையில் அதிகாரிகள் மாற்றம். குறிப்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா போன்றோர் இடம் மாறுதல்கள்.
அதிகாரிகள் முறையாக பணியாற்ற வில்லை அவர்களை வழிநடத்துகிற துறை செயலாளர்களும், அமைச்சர்களும் தான் இதற்கு பொறுப்பு. எனவே சிறு, சிறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்ததாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் அமைச்சரவையில் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
திறம்பட அந்த துறையில் அவர் செயல்பட்டாலும் கூட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்பார்ப்பு அவரை ஒரு துணை முதல்வர் ஆக்கிட வேண்டும் என்பதுதான். அதற்கான விவாதங்கள் கூட இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் நடைபெறலாம். நடைபெறலாம் என்ன? நடைபெறும்.
மேலும் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் மக்கள் முகம் சுளித்துக்கொண்டே இருக்கிறார்கள் அவை முறையாக மக்களிடம் போய் சேரவில்லையா? அப்படி சேராததற்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தாலும் கூட கடைசியில் பொறுப்பேற்க வேண்டியது அந்த துறை சார்ந்த அமைச்சர் தான். அது போன்ற ஆறு அமைச்சர்களின் பட்டியல் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இடம் உள்ளது.
மேலும் திமுகவை மக்கள் பெரிதும் நம்பி இருந்தார்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக திமுக விளங்குகிறதா என்றால் அதுதான் இல்லை. இதுவும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

திமுகவை பொருத்தவரை புதிய ஆட்களுக்கு பிரதிநிதித்துவ இடமளிக்கப்படும் என்று சொன்னாலும் கூட தற்போது இருக்கிற அமைச்சர் மகன்களை மீறி யாரும் சீட்டு கேட்டு விட முடியாது. என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கிவிட்டால் ஸ்டாலின் நினைக்கிற, பொதுமக்கள் நினைக்கிற பிரச்சனைகளை உதயநிதி மக்களிடம் ஒன்று சேர்ப்பார் என்கிற நம்பிக்கையும் ஸ்டாலினுக்கு இருந்து வருகிறது.
ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்வளத்துறை ஆவடி நாசர் ஆகியோர் மீது முதல்வர் அதிர்ப்தியில் இருந்து வருவது தெரிகிறது. ஏனென்று சொன்னால் வேங்கை வயல் விவகாரத்தில் அமைச்சர் கயல்விழியின் செயல்பாடுகள் அப்படி.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் இளைஞர் அணி காலத்தில் இருந்தே பயணித்து வருபவர் என்றாலும் ஆவினில் துறைரீதியாக அவர் சந்தித்து வரும் சர்ச்சைகள். அதுமட்டுமல்லாமல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ சர்ச்சை ஒரு பக்கம் திமுகவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் அண்ணாமலை கேட்கிற கேள்விக்கு முறையாக பதில் சொல்லுகிற அளவிற்கு அமைச்சர்கள் இல்லை என்பது ஒரு வகையில் முதல்வருக்கு வருத்தம் தான். இனிமேலும் இப்படியே இருந்தால் மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். எனவே ஒரு மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு தான் தமிழக முதல்வர் இந்த அமைச்சரவையை அவசர அவசரமாக கூட்டுகிறார்.
முடிவு பல மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முதலமைச்சரின் கடந்த கால டெல்லி பயணத்தின் போது உடனே இருந்து டி ஆர் பாலு ஒரு கோரிக்கையை முன் வைத்திருப்பதாக தெரிகிறது அது அவரது மகனை அமைச்சராக்க வேண்டும் என்கிற அந்த கோரிக்கை.
இந்த சூழலில் தான் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது இதுபோன்ற இன்னும் பல மாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
மேலும் தமிழக முதல்வர் வெளிநாடுகள் பயணம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு முதல்வராக அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.பொருத்திருந்து பார்க்கலாம்….
Leave a Reply
You must be logged in to post a comment.