சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் மலைப்பாதை சாலை சரிந்து விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் வடக்கு மீஜோ நகரின் டாபு கவுண்டியில் மலையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் அங்கு திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. ஏறக்குறைய 18 மீட்டர் அளவுக்கு மலைப்பாதை சரிந்து இடிந்து விழுந்தது. அதில் 20 வாகனங்கள், 54 பயணிகள் சிக்கி கொண்டதாக ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்தது.

அதில் 24 பேர் பலியாகி விட்டனர். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சீனாவில் 5 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் அங்கு சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய வாகனங்கள் தீப்பற்றி எரிவதும் வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.