பட்டுக்கோட்டையில் 10 வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை !

2 Min Read
10 வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் சாலையில் உள்ள எஸ்.எம்.எஸ் அவென்யூ, பாரதி சாலை வடக்கு பகுதியில் உள்ள ஏ.எஸ்.எம்.என். ரெசிடென்சி என்ற கட்டிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் ராமநாதன் (வயது 45), அவரது மனைவி காளீஸ்வரி (வயது 35) . இவர்களுக்கு நிவ்யதர்ஷினி ( வயது 10) என்ற ஒரு மகள் உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

ராமநாதன் பட்டுக்கோட்டையில் டீக்கடை நடத்தி வந்த நிலையில் , வியாபாரத்தில் நஷ்டம் அடைந்துள்ளார் . அதன் பிறகு குடும்ப சுமை காரணமாக சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். அவரது மனைவி காளீஸ்வரி அவர்களது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் தையல் பணி செய்து வருகின்றார் . இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆவதாகவும், அவர்களது மகள் நிவ்யதர்ஷினி தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர் .

பட்டுக்கோட்டை அருகே சோகம்

ராமநாதனுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்து பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதால். அதன் அடிப்படையில் கடன் பிரச்சனை தாங்காமல் சென்னை சென்று அங்கே டீ கடை வைத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடன் பிரச்சனை தொடர்பாக அவரது மனைவிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் மன உளைச்சல் இருந்ததாகவும், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், அவரது கணவர் தொழில் நிமித்தமாகச் சென்னை சென்ற பிறகு, காளீஸ்வரி அவரது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் பதட்டம் அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பிரேதங்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை

பட்டுக்கோட்டை அருகே சொந்த தாயே 10 வயது பள்ளிச்சிறுமியை கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -2464005

Share This Article

Leave a Reply