இந்திய மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பா.ஜ.க. எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், போராட்டம் நடத்தி வரும வீரர், வீராங்கனைகள் மீதான டெல்லி போலீசாரின் தாக்குதல்களை கண்டித்தும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் இதயத்தில் இருந்து தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து நேரடியாக வந்து தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராடினர். இதையடுத்து போலீசார் பேரிகார்டு கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். தலைமை தபால் நிலையம் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.