கும்பகோணம் “கோவில்களின் நகரம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும், பாக்கும் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்க காலத்தை (கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை) சேர்ந்தவை.
இன்றைய கும்பகோணம் பண்டைய நகரமான குடவாயிலின் தளம் என்று நம்பப்படுகிறது, அங்கு ஆரம்பகால சோழ மன்னரான, கரிகால் சோழன் தனது நீதிமன்றத்தை நடத்தினார். சில அறிஞர்கள் கும்பகோணத்தை குடவையர்-கோட்டத்தை, சிறைச்சாலையின் இடமாக அடையாளம் காண்கின்றனர், அங்கு சேர மன்னர் கணைக்கால் இரும்பொறையை, ஆரம்பகால சோழ மன்னர் செங்கணானால் சிறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்கின்றனர்.

சின்னமனூர் செப்புப் பட்டயத்தின்படி, கும்பகோணம் கி.பி. 859-இல் பல்லவ மன்னர் ஸ்ரீ வல்லபாவிற்கும், அப்போதைய பாண்டிய மன்னருக்கும் இடையிலான போரின் இடமாக இருந்தது.
9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள் ஆட்சியின்போது கும்பகோணம் வெளிச்சத்திற்கு வந்தது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ (5.0 மைல்) தொலைவில் உள்ள பழையாறை நகரம், 9-ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது.
அய்யம்பேட்டை அருகே வீடு கட்டுவதற்காக பள்ளம் தோன்றியபோது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி என்ற கிராமம் உள்ளது. ஆக, அந்த நல்லிச்சேரி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் அய்யர் என்பவர் அவரது இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோன்றிய போது, பித்தளை பெட்டி ஒன்று கிடைத்துள்ளது.
அதில் பழங்காலத்து செப்பு நாணயங்கள் மற்றும் ஒரு பைசா நாணயங்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருந்துள்ளன. இதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் அய்யம்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பழங்காலத்து நாணயங்கள் அடங்கிய பெட்டியை வட்டாட்சியர் சக்திவேலிடம் ஒப்படைத்து, அங்குள்ள பாதுகாப்பு அறையில் அந்த நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.