மயிலம் அருகே ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து 50000 ரூபாய் பணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்க நகை வாங்கிய வாலிபர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலம் அடுத்த உள்ள தொள்ளம்பூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் சக்திவேல் வயது 32. இவர் அதேபகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி வயது 27 என்பவரிடம் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி ஏ.டி.எம் கார்டை கொடுத்து 10000 ரூபாய் பணம் எடுத்து வரும் படி கூறியுள்ளார். இதனால் ராஜலட்சுமி பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பணம் வராததால் அங்கிருந்து ஒருவரிடம் பணம் எடுத்து தருவதாக கூறி, தனது ஏ.டி.எம் கார்டை வாங்கி பணம் வரவில்லை என அந்த நபர் மற்றொரு போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து விட்டு அங்கிருந்து தலைமறைவானார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சக்திவேல் செல்போனுக்கு 50000 ரூபாய் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த நிலையில் சக்திவேல் ராஜலட்சுமி தொடர்பு கொண்டு 50000 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது என தெரிவித்தது. இதனையடுத்து ராஜலட்சுமி நான் பணம் எடுக்கவில்லை, ஏ.டி.எம்.மில் பணம் வராததால் வீட்டுக்கு வந்து விட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் ஏ.டி.எம் கார்டை பார்த்த போது போலியான ஏ.டி.எம் கார்டு என தெரியவந்தது. இது குறித்து சக்திவேல் மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வானூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் 50000 ரூபாயும், புதுச்சேரியில் உள்ள தனியார் நகைக்கடையில் 50000 ரூபாய்க்கு தங்க நகையை மர்ம நபர் வாங்கியது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி தனிப்படை போலீசார் சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த பாசி பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சையத் முகமது. இவரது மகன் சையத் இப்ராஹிம் வயது 36 என்பவரை கைது செய்து, விசாரணை செய்ததில் பெரும்பாக்கம் பகுதியில் போலி ஏ,டி,எம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 17 போலி ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார், சையத் இப்ராஹீம் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.