பிரதமர் நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்ற நிலையில் அவருடன் முழு அமைச்சரவையும் பதவி பெற்றுள்ளது.லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 3வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பொறுப்பேற்றனர் .பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். பாஜகவிற்கு தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. முழு அமைச்சர்களும் பதவியேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முழு அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது.

முழு அமைச்சர்களின் பலம் 78 முதல் 81 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. நாடு முழுக்க அனைவரின் பார்வையும் மோடியின் அமைச்சரவை பெர்த் ஒதுக்கீட்டில் உள்ளது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் ஆகிய முக்கியமான இலாகாக்களை வைத்திருப்பவர்கள் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் ஆக போகும் எம்பிக்கள் பதவி ஏற்பார்கள்.

“மோடி 3.0.. “
பாஜகவினரே எதிர்பார்க்கல.. அமைச்சரவையில் இதை கவனிச்சீங்களா? இந்த முக்கிய துறைகள் அனைத்தும் பாஜக வசம் தொடர்ந்து இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நிலக்கரி போன்ற முக்கியமான அமைச்சரவையை கைப்பற்ற போகும் அமைச்சர்களும் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாரெல்லாம் அமைச்சர்கள்: குஜராத் குமாரசாமி முதல்.. மனோகர்லால் கட்டார் வரை.. முதல் முறையாக மத்திய அமைச்சர்கள்? யார்னு பாருங்க
அமித் ஷா (பாஜக)
எஸ் ஜெய்சங்கர் (பாஜக)
மன்சுக் மாண்டவியா (பாஜக)
சிஆர் பாட்டீல் (பாஜக)
நிமுபென் பாம்பானியா (பாஜக)
ஒடிசா அஸ்வினி வைஷ்ணவ் (பாஜக)
தர்மேந்திர பிரதான் (பாஜக)
ஜுவல் ஓரம் (பாஜக)
கர்நாடகா
நிர்மலா சீதாராமன் (பாஜக)
எச்.டி.குமாரசாமி (ஜேடிஎஸ்)
பிரகலாத் ஜோஷி (பாஜக)
ஷோபா கரந்த்லாஜே (பாஜக)
வி சோமண்ணா (பாஜக)
மகாராஷ்டிரா
பியூஷ் கோயல் (பாஜக)
நிதின் கட்கரி (பாஜக)
பிரதாப் ராவ் ஜாதவ் (சிவசேனா)
ரக்ஷா காட்சே (பாஜக)
ராம் தாஸ் அத்வாலே (இந்திய குடியரசுக் கட்சி)
கோவா
ஸ்ரீபத் நாயக் (பாஜக)
ஜே & கே ஜிதேந்திர சிங் (பாஜக)
ஹிமாச்சல்
ஜேபி நட்டா (பாஜக)
மத்திய பிரதேசம்
சிவராஜ் சிங் சவுகான் (பாஜக)
ஜோதிராதித்ய சிந்தியா (பாஜக)
சாவித்ரி தாக்கூர் (பாஜக)
வீரேந்திர குமார் (பாஜக)
உத்தரபிரதேசம்
ஹர்தீப் சிங் பூரி (பாஜக)
ராஜ்நாத் சிங் (பாஜக)
ஜெயந்த் சௌத்ரி (RLD)
ஜிதின் பிரசாத் (பாஜக)
பங்கஜ் சவுத்ரி (பாஜக)
பிஎல் வர்மா (பாஜக)
அனுப்ரியா படேல் (அப்னா தால்-சோனிலால்)
கமலேஷ் பாஸ்வான் (பாஜக)
எஸ்பி சிங் பாகேல் (பாஜக)
பீகார்
சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி கட்சி-ராம் விலாஸ்)
கிரிராஜ் சிங் (பாஜக)
ஜிதன் ராம் மஞ்சி (இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா)
ராம் நாத் தாக்கூர் (ஜேடியு)
லாலன் சிங் (ஜேடியு)
நித்யானந்த் ராய் (பாஜக)
ராஜ் பூஷன் சௌத்ரி (விகாஷீல் இன்சான் பார்ட்டி)
சதீஷ் துபே (பாஜக)
அருணாச்சல
கிரண் ரிஜிஜு (பாஜக)
ராஜஸ்தான்
கஜேந்திர சிங் ஷெகாவத் (பாஜக)
அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக)
பூபேந்தர் யாதவ் (பாஜக)
பகீரத் சவுத்ரி (பாஜக)
ஹரியானா
எம்எல் கட்டார் (பாஜக)
ராவ் இந்தர்ஜித் சிங் (பாஜக)
கேரளா
சுரேஷ் கோபி (பாஜக)
தெலுங்கானா
ஜி கிஷன் ரெட்டி (பாஜக) பாண்டி சஞ்சய் (பாஜக)
தமிழ்நாடு
எல் முருகன் (பாஜக)
ஜார்கண்ட்
சந்திரசேகர் சவுத்ரி (AJSU)
அன்னபூர்ணா தேவி (பாஜக)
ஆந்திரப் பிரதேசம்
டாக்டர். சந்திர சேகர் பெம்மாசானி (TDP)
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு (TDP)
சீனிவாச வர்மா (பாஜக)
மேற்கு வங்கம் சாந்தனு தாக்கூர் (பாஜக)
சுகந்தா மஜும்தார் (பாஜக)
பஞ்சாப்
ரவ்னீத் சிங் பிட்டு (பாஜக)
அசாம்
சர்பானந்தா சோனோவால் (பாஜக)
பபித்ரா மார்கெரிட்டா (பாஜக)
உத்தரகாண்ட் அஜய் தம்தா (பாஜக)



Leave a Reply
You must be logged in to post a comment.