இராமநாதபுரத்தில் மோடி நின்று வெற்றி பெறுவார் – மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அதிரடி பேச்சு !

1 Min Read
எஸ்.ஜி.சூர்யா

இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும் என அமித்ஷா கூறியதை நிறைவேற்றும் வண்ணம், இராமநாதபுரத்தில் மோடி நின்று வெற்றி பெறுவார் என மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பேசியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில்‌‌பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான‌‌அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொது கூட்டம்‌‌  இராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்.பால கணபதி, மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

அப்போது பேசிய மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா,‌‌கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்தான் பிரதமராக வர வேண்டும் என்று கூறியதை சுட்டிக்காட்டி, தமிழ் நாட்டில்  இராமநாதபுரத்தில் பிரதமரே போட்டியிடுவார் என்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply