கேலோ இந்தியா போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கின. இந்தப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின.கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்தது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் – 2023-ஐ, சென்னையில் நடத்திட முடிவு மேற்கொண்டதைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அலுவலர்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் அனைவருடனும் இணைந்து இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.
இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி போட்டிகளை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய பிரதமர், “தமிழ்நாடு சாம்பியன்களின் பூமியாக திகழ்கிறது” என்றார்.தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின்,“மணிப்பூர் பிரச்னையால் பயிற்சி பெற முடியாத வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கினோம்; இதுதான் திராவிட மாடல்” என்றார்.இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடியும், மு.க. ஸ்டாலின் கைகளை பிடித்தபடி வந்தனர். நடந்து வந்தபோது மு.க. ஸ்டாலின் ஒரு இடத்தில் தடுமாறிவிட்டார்.

அப்போது அவரது கைகளை விடாமல் பிரதமர் நரேந்திர மோடி தாங்கிப் பிடித்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் நம் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திட 1,000-க்கு மேற்பட்ட நடுவர்கள், 1,200-க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் துணைபுரிவார்கள்.
இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ல் முதல்முறையாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் உட்பட மொத்தம் 27 விளையாட்டுகள் காட்சி விளையாட்டுகளாக (DEMO Sports) இடம் பெறுகின்றன.இந்த விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொன்றும் நடைபெறும் இடம், நாள், நேரம் ஆகியவை குறித்த விவரங்கள் விளையாட்டு ஆர்வலர்களுக்கு வசதியாக இணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.