அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் . அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது .
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக 2019-ல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கடந்த மாதம், சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு ராகுல் காந்திக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி, மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசமும் கொடுத்தது நீதிமன்றம்.
மேலும், இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த நாளே, எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டு, வயநாடு நாடாளுமன்றத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க-வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர் .
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், இன்று (ஏப்ரல் 13ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டது. அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைத்துத்தரப்பிலும் எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.