சர்வதேச மகளிர் தின விழாவை ஒட்டி பல்வேறு நிகழ்வுகள் பல இடங்களில் நடந்த வண்ணம் உள்ளன அந்த வகையில் மகளிர் தின விழாவை ஒட்டி அரசியல் பிரமுகர்கள் பல நிகழ்வுகளை தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் 200 துப்புரவு தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு ரோஜா பூ கொத்து கொடுத்ததோடு அத்தியாவசிய பொருட்களான புடவை பக்கெட் கொண்டவற்றையும் வழங்கினார்.
திறந்த மனதோடு டாக்டர் லட்சுமணன் வழங்கிய பரிசு பொருட்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களையும் மதித்து அவர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்த முதல் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் தான் என்று தெரிவித்துக் கொண்டனர்.
அத்துடன் பொதுமக்களின் தாகம் தீர்க்க குடிநீர் பந்தல்கள் திறந்து டாக்டர் லட்சுமணன் பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளேரிபிஞ்சு பழச்சாறு ஆகியவற்றை வழங்கினார். விழுப்புரம் மகாராஜபுரம் தந்தை பெரியார் நகர் பழைய பேருந்து நிலையம் மற்றும் லட்சுமணன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகிய இடங்களில் நீர் மோர் பந்தல்களைத் திறந்து பொதுமக்கள் தாகம் தீர்க்க உதவினார் தொடர்ந்து இந்த குடிநீர் பந்தல்களை பராமரிக்க கட்சி தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.