கோவை ஈஷா மையத்தில் காணாமல் போனவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

1 Min Read

சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்காசி மாவட்டம், அருகே குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்தவர் விவசாயி திருமலை தாக்கல் செய்து உள்ள ஆட்கொணர்வு மனுவில் என் சகோதரர் கணேசன் என்ற சாமி பவதத்தா என்பவர் கோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார்.

- Advertisement -
Ad imageAd image
கோவை ஈஷா யோகா மையம்

கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி முதல் ஈசா யோகா மையத்தில் இருந்து அவரை காணவில்லை. இது குறித்து கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி ஈசா யோகா மையம் பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்ட ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஓராண்டு காலமாகியும் என் சகோதரரை கண்டுபிடிக்கவில்லை. எனவே காணாமல் போன என் சகோதரரை கண்டுபிடித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

உயர்நீதிமன்றம்

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் இதுவரை 36 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. புலன் விசாரணை வேகமாக நடந்து வருகிறது என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் விசாரணை விரைவாக நடத்தி, காணாமல் போனவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Share This Article

Leave a Reply