இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஆவின் நிறுவனத்தை அவமதிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், இந்த நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று செய்யப்பட்ட ஒரு விஷமத்தனமான செயல் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,”நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் 06.06.2023 அன்று “அம்பத்தூர் ஆவினில் பணியமர்த்தப்பட்ட சிறார்கள்” என்ற செய்தி வெளியானது.
அம்பத்தூர் பால் உபப்பொருட்கள் பண்ணையில் பால் உபப்பொருட்கள் அன்றாடம் உற்பத்தி செய்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, துணைப் பொது மேலாளர் (பால்பதம்), பால் உபப்பொருட்கள் பண்ணை, அம்பத்தூர் அவர்கள் அளித்த அறிக்கையில் இச்செய்தியானது, இதற்குமுன் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்த திரு.பரத் (வயது 24) என்பவரால் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு தவறாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் பால் உபப்பொருட்கள் பண்ணையில் ஒரு சில பணிகள் ஒப்பந்ததாரராலும் மற்றும் ஒரு சில பணிகள் தினக்கூலி பணியாளர்களாலும் செய்யப்பட்டு வருகிறது. இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள M/s.ஹரிராம் ஸ்வீட்ஸ் என்ற நிறுவனம் ஐஸ்கீரிம் கப் மற்றும் கோன்கள் தயாரிக்கும் பணியை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறது.
அனைத்து ஒப்பந்தப் பணிகளுக்கும் ஒப்பந்த விதிமுறைகளின் படி 18 முதல் 50 வயதிற்குள்ளான பணியாளர்கள்/தினக்கூலி பணியாளர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அம்பத்தூர் பால் உபப்பொருட்கள் பண்ணையில் பணிபுரியும் TEXCO பாதுகாவலர்கள் ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணிக்கு பணியாளர்களை அனுமதிக்கும்போது 18 வயதிற்கு மேல் உள்ள பணியாளர்களை மட்டுமே பணிக்கு உள்ளே அனுமதிக்கும்படியான கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே, 18 வயதிற்கு கீழுள்ள நபர்கள் யாரும் நேரடியாகவோ அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலமாகவோ அம்பத்தூர் பால் உபப்பொருட்கள் பண்ணையில் பணியமர்த்தப்படவில்லை என்று உறுதியாகத் தெரிகின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.