கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியில் ஒலித்த முருகன் பாடல் காவடி ஆட்டம்- கண்டு ரசித்த அமைச்சர்கள்.
கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு கலைஞர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது . இந்த விழாவை முன்னிட்டு கலைஞரின் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன்,செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் புகைப்பட கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்றைய துவக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுது. இந்நிலையில் பரதநாட்டிய நடனகுழுவினர் “சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா” என்ற பாடலுக்கு நடனமாடினர். தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க காவடி ஆட்டமும் ஆடினர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் புகைப்பட கண்காட்சியில் திடீரென முருகன் பாடல் பாடி,காவடி ஆட்டம் ஆடியது அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இதனை அமைச்சர்களும் கண்டு ரசித்தனர். கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று துவங்கப்பட்டது.

இக்கண்காட்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இதழாளர் – கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், விழாக் குழு இணைத் தலைவர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழாக் குழு இணைத் தலைவர் பால் வளத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.
இப்புகைப்படக் கண்காட்சியில் கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் கலைஞர், குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், என்.ராம் (ஹிந்து நாளிதழ்), நக்கீரன் கோபால், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலைஞர் நூற்றாண்டு விழாயில் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.