உயிரிழந்த நடிகர் சத்தியராஜ் தாயாரின் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி.

1 Min Read
சத்யராஜ் அம்மா

சத்யராஜ் அம்மா நாதாம்பாளின் இறுதிச் சடங்கு கோவையிலேயே நடைபெறும் என சொல்லப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்புக்கு ஹைதராபாத் சென்றிருந்த சத்யராஜ், அம்மாவின் மறைவு செய்திக் கேட்டு உடனடியாக கோவை வந்துள்ளார். அம்மாவை இழந்துவாடும் சத்யராஜ்ஜுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர், ரசிகர்கள் உட்பட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் சத்யராஜ்ஜுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவரது அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில், “நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சத்யராஜின் தாயார் தாயார் நாதாம்பாள் உடலுக்கு அமைச்சர் சேகர் பாபு மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். வயது மூப்பின்  காரணமாக  உடல் நலக்குறைவு ஏற்படவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.  நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தாய் உயிரிழந்த  செய்தியறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் ,தனது மகன் சிபிராஜூடன் நேற்றிரவு 9 மணி அளவில் கோவை வந்தார். நாளை காலை 11:00 மணிக்கு இறுதி சடங்கு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாட்டில் உள்ள சத்யராஜின் தங்கை வந்தவுடன் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில்  இறுதி சடங்கு நடைபெறும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Share This Article

Leave a Reply