போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியை நீக்க வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தவும், அமலாக்க துறைக்கு குற்றப்பிரிவு முறையான ஒத்துழைப்பு கொடுக்கவும் உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ள நிலையில், விசாரணை நடத்த செந்தில் பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.அதிகார துஷ்பிரயோகத்தை தவிர்க்க உடனடியாக செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும்.அப்படி இல்லையெனில்,அவரை பதவியை விட்டு நீக்க வேண்டியது முதலவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடமை மற்றும் பொறுப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடர்ந்த வழக்கில் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-16 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பணமோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.