விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ மற்றும் திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா. புகழேந்தி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 10:30 மணி அளவில் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த சங்கராபுரம், அத்தியூர் திருவாதித்தினைச் சார்ந்த புகழேந்தி உளுந்தூர்பேட்டை அரசுப் பள்ளியில் படித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த புகழேந்தி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தோல்வியுற்றார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புகழேந்தி விழுப்புரம் மத்திய மாவட்ட, திமுக மாவட்ட செயலாளராகவும் உள்ளார். புகழேந்தியின் மனைவி கிருஷ்ணம்மாள் ஆவார்.
இந்த இணையருக்கு செல்வகுமார் என்ற மகனும். செல்வி, சாந்தி, சுமதி என்ற மகள்களும் உள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த திமுக-வைச் சேர்ந்த ராதாமணி உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார்.

திமுக-வும் அதிமுக-வும் நேரடியாக மோதும் இந்தத் தொகுதியில் விழுப்புரம் மாவட்ட திமுக பொருளாளரான நா.புகழேந்தியை வேட்பாளராக மு.க.ஸ்டாலின் களம் காண வைத்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசி. 1973-ம் ஆண்டு கிளைக் கழகச் செயலாளராக கட்சியில் சேர்ந்த இவர், 1980 – 1986 காலகட்டங்களில் மாவட்டப் பிரதிநிதியாக இருந்தார். கடந்த 1989-ல் பொன்முடி முதல் முறையாக விழுப்புரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்காக கடுமையாக தேர்தல் பணி செய்தவர்.

அதற்கு நன்றிக்கடனாக இவருக்கு 1996-ல் கோலியனூர் ஒன்றிய சேர்மன் பதவியையும் 2006-ம் ஆண்டு இவரின் மருமகளுக்கு சேர்மன் பதவியையும் வழங்கி அழகு பார்த்தார் பொன்முடி.
பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களாக செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி.சம்பத் போன்றவர்கள் திமுக-வின் விழுப்புரம் மாவட்டத் தலைவர்களாக இருந்த காலத்தைக் கூறலாம்.

அத்தகைய தருணங்களில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே பொன்முடிக்கு ஆதரவாக இருந்தனர். அதில் ஒருவர் இறந்து போன விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ ராதாமணி. மற்றொருவர் தற்போது மாவட்ட செயலாளராக இருந்த நா.புகழேந்தி.
30 வருட காலங்களாக உற்ற நண்பராகவும் உடன்பிறவா சகோதரரை போல் இருந்த புகழேந்தியின் மரணம், அமைச்சர் பொண்மூடியை கலங்கடிக்க செய்துள்ளது.

இன்று காலை புகழேந்தியின் மரணசெய்தி அறிந்த நொடி முதல் , சோகத்தில் ஆழ்ந்த அமைச்சர் பொன்முடி, அவரது பூத உடல் வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அவரது பூத உடலுக்கு அருகாமையில் அவரது நினைவுகளை மறக்க முடியாமல் சோகத்தில் காணப்பட்டு வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.