மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அன்று இரவு வினாடிக்கு பத்தாயிரம் கண அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுவிட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் வினாடிக்கு 103 அடியாக இருந்தது.அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 867 கன அடியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து அணையிலிருந்து பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டது. குறிப்பாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறக்க திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் டெல்டா பாசனப்பகுதியில் மழை பெய்யும் சூழலால், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நேற்று வரை தீவிரம் அடையாததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அணைகளில் நீர் இருப்பு கடந்த ஆண்டு ஒப்பிட்டு பார்க்கும்போது மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனிடையே சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடகா அரசு கடந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி தண்ணீரை அழித்து இருக்க வேண்டும்.ஆனால் இதற்கு மாறாக 2.8 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. பருவமழை கை கொடுக்காத நிலையில் கர்நாடகமும் சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயத்தை அளவின்படி தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்கவில்லை. இது மட்டும் இன்றி மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையே தற்போது நீடித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.
அதாவது கடந்த மாதம் 12ஆம் தேதி 103 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 79.40 அடியாக சரிந்து உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அணையின் நீர்மட்டம் சுமார் 24 அடி குறைந்துள்ளது. மேலும் அணை நீர்மட்டம் நேற்று 79.40 அடியாக குறைந்துள்ளது. அதாவது 80 அடிக்கும் கீழே குறைந்துவிட்டது. இதற்கு முன்பாக மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்து 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி 80 அடிக்கும் கீழே 79.50 அடியாக குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு நீர்மட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து 80 அடிக்கும் குறையாமல் இருந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் 80 அடி கீழே சரிந்துள்ளது.
எனவே கர்நாடக மாநில அரசிடம் வலியுறுத்தி காவிரி ஆற்றில் உரிய அளவில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவேரி டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.