நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து – ஜூன் 23 ஆம் தேதி மறுத்தேர்வு..!

2 Min Read

நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு NEET கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இந்த தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு 571 நகரங்களில் கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்டது.

நீட் தேர்வு

கடந்த ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த நிலையில் சில மாநிலங்களில் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்துள்ளது. சில மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். சிலருக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய அரசு

இதை அடுத்து, ‘நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டது குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது’ என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. விசாரணையில், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டதன் மூலம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்க்கை உறுதி செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தேசிய தேர்வு முகமை

அவர்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும். ஒருவேளை, மறுதேர்வில் பங்கேற்கவிரும்பாவிட்டால், கருணை மதிப்பெண் நீங்கலாக ஏற்கெனவே நீட் தேர்வில் அவர்கள் பெற்றிருந்த மதிப்பெண் வழங்கப்படும்.

மறுதேர்வு முடிவுகள் ஜூன் 30-ல் வெளியிடப்படும். மருத்துவ கலந்தாய்வு ஜூலை 6 முதல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply