மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைப்பெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் துவகியது. இதனை தொடர்ந்து உதகை ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி கடந்த 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளது.
இந்நிலையில் கோடை விழாவின் ஒரு நிகழ்ச்சியாக இன்று உதகை படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடைப்பெற்றது. இந்த படகு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த படகு போட்டியில் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியினர் போட்டி, பத்திரிக்கையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்க்கான போட்டி என தனித் தனியாக நடைப்பெற்றது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த நிஷாத் மற்றும் ஆசீப் முதலிடத்தையும், ஊட்டியை சேர்ந்த தேவா மற்றும் சுபாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும், கோவையை சேர்ந்த திருமூர்த்தி மற்றும் நிதீஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் சென்னையை சேர்ந்த பரணி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முதலிடத்தையும், சென்னையை சேர்ந்த நர்மதா மற்றும் பிரியா ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர்.

தம்பதியினர்களுக்கான போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த மிர்துன் ஜெய் மற்றும் புரவி தம்பதியினர் முதலிடத்தையும், ஒடிசாவை சேர்ந்த ஆட்நவாஸ் மற்றும் அல்பாகான் தம்பதியினர் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.
உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகு போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரீத் வெற்றி கோப்பைகளை வழங்கினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.