விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் இரவு 12 மணி அளவில் நடைபெற்றது .
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த ஊஞ்சல் உற்ச்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள ஒன்றுகூடி வழிபடுவது வழக்கம்.

நேற்று நடைபெற்ற நிகழ்வை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. காலை 6 மணி முதல் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்து வந்திருந்தனர் .
இதை தொடர்ந்து இரவு நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்காக உற்சவர் அங்காளம்மன் பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சர்வ யோகேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊஞ்சலில் அமர வைக்கப்பட்ட உச்சவரை பார்த்து மகிழ்ந்தனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் செய்தனர் மேலும் ஊஞ்சல் உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக பல்வேறு மாவட்டத்திலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.