மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவான திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புகழ்பெற்ற மாசி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரகம் மயான கொள்ளை ஆண் பூத வாகனம் பெண் பூத வாகனம் சிம்ம வாகன வீதி உலா அதனை தொடர்ந்து தீமிதி திருவிழா என்று நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் ஏழாம் நாளான இன்று 14 03 2024 வியாழக்கிழமை திருத்தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருத்தேரின் சிறப்பு என்னவென்றால் சிவனுக்கு பிரமஹத்தி தோஷம் பிடித்து மேல்மலையனூர் மயான கொள்ளையில் அங்காளபரமேஸ்வரி சிவனுக்கு பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கியதால் உக்கிரமான அங்காளபரமேஸ்வரி சாந்தப்படுத்தவே தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் தேர் பாகங்களாக மாறி அம்மனை சாந்திபடுத்தியதாக ஐதீகம் உண்டு, அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் பச்சை பனைமரம்,புளிய மரம் , காட்டுவாழ் மரம் போன்றவற்றால் புதிதாக தேர் செய்யப்பட்டு திருவிழா நடைபெறுகிறது. இந்தத் தேரினை படைத்தேர் என்றும் அழைப்பர்.

அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்ட பின் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த உற்சவர் அங்காளம்மன் பூசாரிகள் வழக்கப்படி திருத்தேருக்கு கொண்டுவரப்பட்டு வடக்கு வாசலில் இருந்து திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. அதனை தொடர்ந்து முக்கியமான வீதிகளில் திருத்தேர் வலம் வந்து மீண்டும் வடக்கு வாயிலை வந்தடைந்தது.
இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தி அங்காளம்மனை வழிபட்டனர்.இந்து சமய அறநிலை துறை வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர் காரணமாக உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
Super