Mayiladuthurai : திமுக சிறுபான்மையின நிர்வாகிக்கு ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி..!

2 Min Read

மயிலாடுதுறை திமுக மாவட்ட சிறுபான்மையின துணை அமைப்பாளரான அகமது ஷா வலியுல்லாவுக்கு, வாட்ஸ் அப் ஆடியோ மூலம், ‘ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேர்ந்த கதிதான் உனக்கும் ஏற்படும் என்றும், உனது கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசுவோம் என மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

மயிலாடுதுறை மாவட்டம், அடுத்த சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் அகமது ஷா வலியுல்லா (40). தொழிலதிபரான இவர், வெளிநாடுகளுக்கு மொத்த ஆடைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், தேயிலை மற்றும் ஏலக்காய் ஏற்றுமதியும் செய்து வருகிறார்.

திமுக சிறுபான்மையின நிர்வாகிக்கு ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி

இவரது தந்தை பஷீர் அகமது திமுகவில் முக்கிய பதவிகளில் இருந்துள்ளார். இதனால் தனது தந்தை வழியில் கடந்த 20 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருந்து தற்போது மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மையின மாவட்ட துணை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அகமது ஷா வலியுல்லா வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த 14 ஆம் தேதி இரவு 10 மணிக்கு முன்பின் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஆடியோ ஒன்று வந்தது. அதில் ஆபாச வார்த்தைகளில் திட்டி, உனது அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசுவோம்.

மயிலாடுதுறை காவல் நிலையம்

ஆம்ஸ்ட்ராங் கொலை போல் உனக்கும் நடக்கும் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அகமது ஷா வலியுல்லா உடனே தனக்கு மிரட்டல் வந்த வாட்ஸ்அப் ஆடியோவுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், எனது அரசியல் பணிகளை பிடிக்காமல் அதை தடுக்கும் விதமாக எனது அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீசுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்த அந்த நபரை கண்டுபிடித்து அவருக்கு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீசார் விசாரணை

மேலும், எனது அலுவலகத்திற்கும், எனக்கும் உரிய பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி மயிலாடுதுறை போலீசார் பிஎன்எஸ் 296(பி), 351(3), 67 ஐடி ஆக்ட் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,

தொழிலதிபர் அகமது ஷா வலியுல்லாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply