மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி.இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ல் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் அதிமுக அலுவலகத்தில் இருந்து கணனி மற்றுல் சில ஆவனங்கள் சில பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி சென்றனர்.
அப்படி கைப்பற்றிச் சென்ற பொருட்கள்,ஆவனங்கள் ஆகியவற்றை ஒப்படைக்க அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து ஒரு உத்தரவிட்டுள்ளது.அதிமுக அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஆவனங்கள், பொருட்கள் ஆகியவற்றை அதிமுக அமைப்புச்செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. இந்த வேளையில் ஓ பன்னீர் செல்வம் அணியினர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. மோதல் வன்முறையானது.
இதையடுத்து அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், பொருட்களை ஓ பன்னீர் செல்வம் தரப்பினர் எடுத்து சென்றனர். இதுபற்றி அதிமுக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் சென்னை ராயப்பேட்டை போலீசாரில் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

ஓ பன்னீர் செல்வம் தரப்பு எடுத்து சென்ற பொருட்கள், ஆவணங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருட்களை எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தான் இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதிமுக அமைப்புச்செயலாளர் சிவி சண்முகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
பொருட்களை எல்லாம் கேட்ட அதிமுக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக, அலுவலகத்தை அதிகாரிக்ள் சீல் வைத்து சாவியை எடுத்துச் சென்று விட்டனர். அதை கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்தியலிங்கம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த பொருட்களுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது. அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிவி சண்முகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதரார் சார்பாக மூத்த வழக்கில் ஜான் சத்தியன், முகமது ரியாஸ் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் எங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருள்களை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.