திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வம்,மல்லிகா தம்பதியரின் மகள் விபூஷ்னியா பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம், குணச்சுந்தரி ஆகியோரின் மகன் மருத்துவரான லோகேஷ்வரனுக்கும் கடந்த 1 ஆம் தேதி பூவிருந்தவல்லியில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த ஒரிரு நாளில் இருவரும் இன்ப சுற்றுலாவிற்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். தீவில் விரைவு மோட்டர் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது படகு விபத்து ஏற்பட்டு இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.பின்னர் காவல்துறையினர் உதவியுடன் லோகேஷ்வரன் உடல் உயிர் இழந்த நிலையில் கண்டெடுத்த நிலையில் விபூஷ்னியா உடல் அடுத்த நாள் எடுக்கப்பட்டது.
இன்பச் சுற்றுலா சென்ற தம்பதி உயிர் இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இருவரின் உடலை அங்கிருந்து சென்னை கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.