சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம்…!

2 Min Read

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று மார்கழி திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி இன்று மார்கழி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சியாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் , ஆகியோர் தேரை வடம்பித்து இழுத்து துவங்கி வைத்தனர். இதில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருகோவில். ஆண்டுதோறும் தை மற்றும் மார்கழி மாத தேர் திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம்

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மார்கழி தேர் திருவிழா கடந்த 18 ஆம் தேதி கெடியேற்றத்துடன் வெகு விமர்சியாக துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி விதி உலா வருவது மற்றும் மக்கள் மார் சந்திப்பு என கடந்த ஒன்பது நாள்களும் பல்வேறு நிகழச்சிகள் நடைப்பெற்றது. 9 ஆம் நாள் திருவிழிவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. சுவாமி தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போழுது அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதேபோல் பிள்ளையார் தேரே சிறுவர்கள் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் குமரியில் மட்டும் அல்லாது கேரளாவிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாலை 6 மணிக்கு சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், இரவு 12 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி விழா போன்றவை நடக்கிறது. இரவு 12 மணிக்கு மக்கள் மார் சந்திப்புக்காக வந்த கோட்டாறு வலம்புரி விநாயகர், வேளிமலை குமார சுவாமி, மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் தங்களது தாய் தந்தையரை பிரிந்து செல்லும் சப்தவர்ணம் நடக்கிறது. இந்த காட்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருப்பர். தேரோட்டத்தை ஒட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் , ஆகியோர் தேரை வடம்பித்து இழுத்து துவங்கி வைத்தனர். நாளை 27 ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், இரவு 9 மணிக்கு மூலவருக்கு அலங்கார அபிஷேகம், அதைத் தொடர்ந்து திரு ஆறாட்டுடன் மார்கழி மாத திருவிழா நடைபெறுகிறது.

 

 

Share This Article

Leave a Reply