என்னதான் நடக்கிறது மணிப்பூரில் ?
மணிப்பூரில் வசிக்கும் மெய்திஸ் இன மக்களுக்கு அதிகாரபூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு எதிராக குகிஸ் இனமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர் மேலும் இந்த பழங்குடி அந்தஸ்து மெய்திஸ் இன மக்களுக்கு அளிப்பதன் மூலம் அரசாங்கம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என்று குக்கிகள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மேலும் மெய்திஸ் தலைமையிலான அரசாங்கத்தால் நடத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிரான போர், தங்கள் சமூகங்களை வேரோடு அழிப்பதற்கான ஒரு திரை என்று குக்கிகள் குற்றம் சாட்டுகின்றனர் .
இந்நிலையில்தான் மியான்மரில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் மணிப்பூரில் பதற்றத்தை அதிகரித்தது , அதிகரித்து வந்த மக்கள்தொகையால் மணிப்பூரில் நிலஉரிமை போராட்டங்களுக்கு வழிவகுத்தது மேலும் வேலையின்மை இளைஞர்களை பல்வேறு போராட்ட குழுக்களில் இனைந்து போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடவைத்தது .

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இரண்டு பெண்களை நிறுவனப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மாநிலத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
மணிப்பூரில் மே 4 ஆம் தேதி மூன்று பெண்களை துணிகளை கழுற்றி மானபங்கம் படுத்தி அவர்களை சாலைகளில் அணிவகுக்க செய்த சம்பவத்தில், வியாழக்கிழமை அன்று 4 பேரை கைது செய்துள்ளனர், அம்மாநில போலீசார் . இந்த கொடூர சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன நிலையில் , இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை உரிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
இந்த வழக்கில் தௌபால் நகரைச் சேர்ந்த ஹீரும் ஹேரா தாஸ் (வயது 32) நான்குபேரை கடத்தல் மற்றும் கூட்டு பலாத்காரம் ஆகிய பிரிவுகளின் கீழ் நோங்போக் செக்மாய் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் . ஹீரும் ஹேரா தாஸ் என்ற குற்றவாளியின் பெயரை மட்டும் வெளியிட்டுள்ள போலீசார் கைது செய்யப்பட்ட மீதமுள்ள 3 பேரின் அடையாளத்தை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

மேலும் இந்த சம்பத்தில் தொடர்புடைய மற்ற தலைமறைவு குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மணிப்பூர் மாநில காவல்துறை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குறைந்தது 8 நபர்களை விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
“சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொலைதூர கிராமங்களை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களில் குறைந்தது 9 பேரை எங்கள் குழுக்கள் அடையாளம் கண்டுள்ளன” என ஒரு போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.இவர்கள் பதுங்கியிருக்கும் மறைவிடங்களில் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக முகாமிட்டுள்ளனர் .
இந்த கொடூர மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட பிற குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள், பலாத்காரம் மற்றும் கொலை ஆகிய பிரிவுகள் ஏற்கனவே முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன என அந்த போலீஸ் அதிகாரி கூடுதல் தகவலை தெரிவித்துள்ளார் .

புதன் அன்று வெளிவந்த துன்பகரமான வீடியோவில் காட்டப்பட்டுள்ளபடி, “ஆழ்ந்த அவமரியாதை மற்றும் மனிதாபிமானமற்ற செயலுக்கு” பெண்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .
விசாரணை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிடம் பேசியதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அவருக்கு உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தை உலுக்கியது , நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசின் தோல்வியை இது பிரதிபலிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார் .
மே 18 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவலறிக்கையின் படி – மே 4 அன்று 800 முதல் 1,000 பேர் கொண்ட கும்பல் பி பைனோம் கிராமத்தை சூறையாடியது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த சிலர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் தந்தையைக் கொடூரமாக கொன்றது.

தங்கள் கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை நாசப்படுத்திய கும்பலிடமிருந்து தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள அந்த குடும்பத்தை சார்ந்த மீதுள்ள நபர்கள் காட்டிற்கு தப்பிச் சென்று மறைந்துகொண்டனர் . பின்னர் போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை காட்டிற்குள் சென்று மீட்டதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் கூறும்போது: அவர்களை அந்த கலவர கும்பலிடம் ஒப்படைத்தது காவல் துறையினர் தான் என்றும் அதற்கு பின்பே அவர்கள் குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதாகவும் , அந்த இருபெண்களை காப்பற்ற வந்த அவர்களின் 19 வயது சகோதரர் வன்முறை கும்பலால் அடித்து கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் .
இந்த கொடூர சம்பவதிற்கு நீதி கிடைத்திட பணியாற்றிவரும் சமூக ஆர்வலர் ஒருவர் , பாதிக்கப்பட்ட குடும்பத்தில் எஞ்சியிருக்கும் பிற உறுப்பினர்கள், மற்ற கிராமவாசிகளுடன் இப்போது சுராசந்த்பூரில் உள்ள ஒரு முகாமுக்குச் சென்று அடைக்கலம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வெட்கக்கேடானது என்று கண்டனம் தெரிவித்ததோடு, 125 பேரைக் பலிவாங்கியுள்ள மணிப்பூர் இன மோதலுக்கு ஆணிவேராக இருப்பர்வகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.