மணிப்பூரில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடி இனத்தினருக்கும் இடையே கடந்த மாதம் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள்.,
மணிப்பூரின் மக்கள்தொகை சுமார் 30 முதல் 35 லட்சம் வரை இருக்கும். இங்கு மெய்தி, நாகா மற்றும் குகி என்ற மூன்று பெரிய சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இந்தக் கோரிக்கையை, குகி மற்றும் நாகா பழங்குடியினா் எதிா்க்கின்றனா்.

மியான்மரின் எல்லையில் உள்ள மாநிலத்தில் மே 3 அன்று பழங்குடியினர் குழுக்கள், பழங்குடியினரல்லாத குழுவான, பெரும்பான்மை இனத்தவரான மெய்திஉடன், பொருளாதார நன்மைகள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள் தொடர்பாக மோதலில் தொடங்கியது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வாழும் மெய்தி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக பழங்குடியினரும், மெய்தி சமூகத்தினரும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்தியது வன்முறையாக மாறியது
மணிப்பூர் இதனால் அந்த பகுதிகளில் பெரும் கலவரம் மூண்டது சில நாட்களுக்கு முன்பு கலவரம் சற்று குறைந்தது.

சில நாட்கள் ஓய்ந்திருந்த கலவரம், 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் தலைதூக்கியது.
பல இடங்களில் மோதல்கள், தாக்குதல்கள் நடைபெற்று வந்தன.இந்நிலையில், நேற்று கங்க்போக்பி மாவட்டம் சங்கைதெல் அருகே வன்முறை சம்பவம் நடந்தது. அங்கே போலீஸ் வேடத்தில் வந்த கலவரக்காரர்கள் பெண் உள்பட 3 பேர் சுட்டுக்கொன்றனர். தகவல் அறிந்து, ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் அங்கு விரைந்தனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 6 வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற மணிப்பூர் மாநில அரசு சமீபத்தில் சிபாரிசு செய்தது.மணிப்பூருக்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று அறிவித்தார். அவற்றில், 5 வழக்குகள் குற்றச்சதி தொடர்பானவை. ஒரு வழக்கு, பொதுவான சதி தொடர்பானது.
இந்நிலையில், மேற்கண்ட 6 வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை சி.பி.ஐ. அமைத்துள்ளது. டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரி தலைமையிலான அக்குழு, விசாரணை பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூருக்கு ரூ.101 கோடியே 75 லட்சம் நிவாரண நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 10,000 வீரா்கள் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக அந்தச் சமூகம் சாா்ந்த தீவிரவாதிகள், மெய்தி சமூக கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனா்.
Leave a Reply
You must be logged in to post a comment.