மணிப்பூர் வங்கியில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூபாய் 19 கோடியை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரின் உக்ருல் நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. உக்ருல் மாவட்ட வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களுக்கு அனுப்பப்படும் பணத்தை சேமிக்கும் மையமாகவும் இதை ரிசர்வ் வங்கி பயன்படுத்தி வருகிறது. இதனால் இந்த வங்கி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதன் படியே நேற்று முன்தினமும் வழக்கம் போல இந்த வங்கியில் பரபரப்பான அலுவலகங்கள் காணப்பட்டன. அப்போது இந்த வங்கிக்கு முகமூடி அணிந்த கும்பல் ஒன்று ஒரு வாகனத்தில் திடீரென வந்து இறங்கினார். வங்கிக்குள் அதிரடியாக நுழைந்த அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களால் வங்கிக்குள் இருந்தவர்களை மிரட்டினர்.

பின்னர் வங்கி ஊழியர்கள் மற்றும் காவலாளிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி ஒரு கழிவறைக்குள் வைத்து பூட்டினார். அதைத்தொடர்ந்து வங்கி அதிகாரி ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணம் இருந்த பெட்டிகளை திறக்க வைத்து கொள்ளையர்கள், அவற்றில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 18.80 கோடியே கொள்ளையடித்து சென்றனர். ஒரு சில நிமிடங்களிலேயே அரங்கேற்றிய இந்த கொள்ளையால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் இந்த கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வங்கிக்கு விரைந்து வந்த போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கினர்.

இந்த கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள், கைவரிசையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே சமீபத்தில் பெரிய அளவில் கலவரம் நடந்த நிலையில் இந்த கொள்ளையின் பின்னணியில் கலவரக்காரங்களின் சதி இருக்குமா? அல்லது ஏதாவது பயங்கரவாதிகளின் சதி இருக்குமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. முகமூடி கொள்ளையர்கள் பட்டப் பகலில் வங்கிக்குள் புகுந்து ரூபாய் 19 கோடியை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மாநிலம் முழுதும் பெரும் அதிர்ச்சியையும் பரம்பரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.