தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் சென்று தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் பங்கேற்ற வருகின்றனர் அந்த வகையில்,
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த 2வது சர்வதேச மல்லர்கம்பம் விளையாட்டு போட்டியில் தமிழகதின் நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரர் மாமல்லன்.மூ.ஹேமசந்திரன் அவர்கள் தனது அபார திறமையால் மீண்டும் வென்று முத்திரை பதித்துள்ளார்.

சர்வதேச மல்லர்கம்பம் தனிநபர் மற்றும் குழு ஆகிய இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
மாமல்லன் மூ.ஹேமச்சந்திரன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டில் மட்டும்
36 வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கம் பதக்கம்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கம் பதக்கம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்வரும் சூழ்நிலையில் மீண்டும் அதை உயிர்ப்பிப்பது போல தமிழக வீரர்கள் பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்கள் மல்லர் கம்பம் பயிற்சியாளர்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.