பேரரசன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா : விழா ஏற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு…

1 Min Read
  • தஞ்சை பெரியக்கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா நாளை 9ம் தேதி துவங்க உள்ளதை ஓட்டி, விழா ஏற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.

தமிழர்களின் கட்டட கலை , சிற்ப கலை, ஓவியம், நீர்மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வரும் தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் சதய விழா அரசு விழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.அதன்படி 1039ம் ஆண்டு சதய விழா (நாளை) 9ம் தேதி காலை திருமுறையுடன் துவங்குகிறது.

இதனையொட்டி, கோவில் தெற்கு பிரகாரத்தில் ஆயிரம் அமரக்கூடிய வகையில் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு வருகிறது. மேலும், இராஜராஜன் சோழன் சிலைக்கு பலவேறு அமைப்பினர் இயக்கத்தினர் காலை முதல் இரவு வரை மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.இதற்காக மேடை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு செய்து சதய விழா குழுவினருடன் கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார்.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/due-to-the-rain-in-pattukottai-the-bus-station-looks-like-a-pool-of-rain-water-and-sewage/

சதய விழாவின் முக்கிய நிகழ்வாக இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா 10ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பெரியக் கோவில் நந்தி மண்டப மேடையில் 1039 நடன கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share This Article

Leave a Reply