உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா…

2 Min Read
  • உலக புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1039ம் ஆண்டு சதய விழா 9ம் தேதி துவங்குகிறது.இது பற்றிய செய்தி தொகுப்பு.

தஞ்சை பெருவுடையார் கோவிலில் காணப்படும் சிற்பம் ஓவியம் மற்றும் கட்டுமான அமைப்பின் தன்னிகரற்ற தன்மையை கண்டு யுனெஸ்கோ நிறுவனம் தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

 

மேலும் மத்திய அரசு தேசிய பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக போற்றி பாதுகாத்து வருகிறது.பார் போற்றும் புகழை உடைய கோவில் தமிழர்களின் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.இத்தகைய சிறப்புமிக்க கோவிலை எழுப்பிய மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

அவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அரசு விழாவாக கொண்டாடப்படும் சதய விழா வருகிற ஒன்பதாம் தேதி துவங்குகிறதுஓவியம் நடனம் சிற்பம் இசை கல்வெட்டு என அனைத்து கலைகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ள பேரரசன் ராஜராஜ சோழனுக்கு சிவபாத சேகரன் உலகளந்தான் என பல பட்டப் பெயர்கள் ராஜராஜசோழனுக்கு உண்டு.

வழக்கமாக ஆலயத்தில் ராஜகோபுரம் பெரியதாகவும், விமானம் சிறியதாகவும் இருக்கும்.ஆனால் பெருவுடையார் கோவிலில் ராஜகோபுரங்கள் சிறியதாகவும், . விமான கோபுரம் பெரியதாகவும் இருக்கும் அதனால்தான் பெரியக் கோவில் என பெயர் வந்தது.மராட்டா நுழைவு வாயில், இராஜராஜன் நுழைவு வாயில், கேரளாந்தகன் நுழைவு வாயில் என 3 நுழைவு வாயில்கள் உள்ளன.ஒரே கல்லால் ஆன 12 அடி உயரம் கொண்ட பெருவுடையார், 13 அடி உயரம் கொண்ட நந்தியம் பெருமான் அமைந்து இருப்பது கோவிலின் சிறப்பாகும்.

பெருவுடையார் சன்னதிக்கு வலதுபுறம் வராஹி, விநாயகர் சன்னதிகள், பின்புறம் ராஜ ராஜ சோழனின் ராஜகுருவான கரூர் தேவர் சன்னதி, இடது புறம் சுப்ரமணியர், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளனகோவில் நான்கு திசைகளிலும் அக்னி குபேரர், வாயு, ஈசானம் ஆகியோரது சிலைகள் உள்ளன.கோவில் பிரகாரத்தில் மராட்டா ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

மூலிகை பெயிண்டால் தீட்டப்பட்டுள்ள ஓவியங்கள் பல ஆண்டுகள் கடந்தும் அழியாமல் உள்ளன.மேற்கு மற்றும் வடக்கு பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளன.இத்தகைய சிறப்பும், பெருமையும் உடைய பெருவுடையார் கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039 ம் ஆண்டு சதய விழா 9ம் தேதி காலை ஓதுவார்கள் திருமுறை இசையுடன் விழா துவங்குகிறது.

தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கருத்தரங்கம், கவியரங்கம். பட்டிமன்றம், புகழ் அரங்கம். நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.சதய விழாவின் முக்கிய நிகழ்வான ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

 

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/the-issue-of-the-student-who-complained-against-the-college-for-charging-additional-tuition-fees-madras-high-dcourt-ordered-to-allow-her-to-write-the-semester-exam/

தொடர்ந்து, திருமுறை திருவீதி உலா, பெருவுடையாருக்கு பால், தயிர், சந்தனம், வில்வ இலை, மஞ்சள், திரவிய பொடி என 48 வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

Share This Article

Leave a Reply