விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் இந்த கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்த்தர் வருவது வழக்கம் அது மட்டுமில்லாமல், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த மாதம் மஹாலய அமாவாசை இந்த புரட்டாசி அமாவாசை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது.

உற்சவர் அங்காளம்மனுக்கு வைஷ்ணவி தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் இரவு 10 30 மணி அளவில் வடக்கு வாயில் வழியாக பூசாரிகள் தோளில் சுமந்து வந்து அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் அமர வைத்து பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசமடைந்து கைகளில் தீபம் ஏந்தி வழிபட்டனர்.இந்த மாதம் மஹாலய அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அமாவாசை விழாவின் போதும் தமிழகத்தின் பல்வேரு பகுதிகலில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூரில் கூடுவார்கள்.அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்வது வழக்கம்.அந்த வகையில் இந்த அமாவாசைக்கும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தது.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலைய அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்வதுடன், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர், மருத்துவத் துறையினர் உள்ளிட்டோர் இருந்தனர்.
நேற்று நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் பழனி கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தார்.வெளியூரில் இருந்து வந்த பக்தர்களுக்கு மேல்மலையனூரில் அன்னதானம் வழங்கப்பட்டது.அமாவாசையை முன்னிட்டு கோயிலின் கோபுரம் உட்பட பல இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.