
கள்ளக்குறிச்சி அருகே பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு முனியப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. அதை ஒட்டி அருள்மிகு முனியப்பன் சுவாமி அருள்மிகு விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக திருக்கோவில்கள் கட்டப்பட்டு காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பட்டி. கொங்கராயபாளையம். உச்சிமேடு.மரூர். விருகாவூர். கூத்தக்குடி. வரஞ்சரம். வேளாக்குறிச்சி. முடியனுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.