ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது.இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

மேலும் அவ்வப்போது மலை கிராமங்களில் உள்ள தனியார் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. மக்னா யானையை கட்டுப்படுத்த மூன்று கும்கி யானைகள் சரளபதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இரவு நேரங்களில் தொடர்ந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சரளபதி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த மக்னா யானை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், இருபதற்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது. ஒரு சில மரங்களை வேரோடு பிடுங்கி எரிந்துள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் கும்கி யானைகளை களத்தில் நிறுத்தியும் எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.