மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், அருகே பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர்,

அப்போது மீண்டும் சவுதிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது குடும்பத்துடன் காரில் வந்துள்ளார். இதனை அடுத்து வெளிநாடு செல்லும் கணவரை வழியனுப்பி வைத்து விட்டு காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் சென்னை – திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற லாரியில் பின்பகுதியில் கார் அதிவேகமாக மோதியது.

அதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டுநர் சரவணன் (50), அப்துல் சமத் மனைவி ஜெய் பினிஷா (40), அவரது மகன்கள் மிக்சால் (20), பைசல் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போது படுகாயங்களுடன் அத்தல் (16) என்ற சிறுவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த விபத்து தொடர்பாக மதுராந்தகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுவன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.