‘உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’: ஆளுநர் பேச்சுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதில்….

1 Min Read
ம்பி சு.வெங்கடேசன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனத்திற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில்,”திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை, அது வெறும் அரசியல் வாசகம் மட்டும் தான்.’ஒரே நாடு, ஒரே பாரதம்’ என்ற கொள்கைக்கு எதிரானது திராவிட மாடல் கொள்கை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், இந்த கொள்கையானது சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மறைக்க பார்க்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர், அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருக்கிறேன்” என்று கூறியியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”திராவிட மாடல் செத்துப் போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே! களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply